நமது டெஸ்ட் கிரிக்கெட் அணி - ஒரு கண்ணோட்டம்
நமது கிரிக்கெட் அணியின் (சச்சின் இல்லாத) நிலமை, அதுவும் ஆஸ்திரேலியா உடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில், மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. இதற்கு முன்னால் நடந்த ஆசியக் கோப்பை, Videocon Cup, Natwest Challenge மற்றும் ICC champions Trophy தொடர்களிலும், நமது வெற்றி சதவிகிதமும் குறைவே, அதாவது 39%.
அப்படியிருந்தும், அதே அணியே திரும்ப திரும்ப களமிறங்கி, தோற்று நம்மை வெறுப்பேற்றுவது வாடிக்கையாகி விட்டது! அணி வீரர்களுக்கென்ன, தோற்றாலும் ஜெயித்தாலும், அதிகமாகவே 'துட்டு' கிடைத்து விடுகிறது! ரசிகர்களாகிய நாம் தான், நேரத்தையும், பணத்தையும், சக்தியையும் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்! நாம் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை என்றும் இழப்பதே இல்லை!!!
இப்போது கூட பாருங்கள், நேற்று கும்ப்ளே 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியதால், இன்று சேவாக் 150+ ரன்கள் குவித்ததால், நமது வெற்றிக் கனவு இன்று துளிர்த்து நாளை விருட்சமாகி விடும் !!! நாம் திருந்துவது கடினமே. இந்த ஆட்டத்தில் நாம் வென்றாலும், அதற்கு கும்ப்ளேவும் சேவாக்-கும் மட்டுமே காரணமாக இருக்க முடியும். TEAM EFFORT என்று கூற இயலாது. தற்போதுள்ள அணியில் மாற்றங்கள் அவசியம் எனத் தோன்றுகிறது.
முக்கியமாக, சமீபத்து தொடர் தோல்விகளுக்கு, கங்குலி பொறுப்பேற்று, captain பதவியிலிருந்து விலகுவது தான் அவருக்கு அழகு. அணியில் உள்ள சில ஆட்டகாரர்களிடத்தில் கங்குலிக்கு இருக்கும் நம்பிக்கையும் விசுவாசமும், வரைமுறை தாண்டி போய் விட்டது. லஷ்மண் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் அடித்த 281-க்கு பிறகு உருப்படியாக எதுவும் செய்ததாக நினைவில்லை!
கங்குலிக்கு பிடித்த யுவரஜிடம் எவ்வளவு திறமை உள்ளதோ, அதை விட ஆணவம் அதிகம். யுவராஜ் தன்னை மட்டை அடிப்பதில் விவியன் ரிச்சர்ட்ஸ் என்றும், பந்து தடுப்பதில் ஜான்டி ரோட்ஸ் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்!? நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸிலும், நமது அணி இருந்த நெருக்கடியான நிலமையை சற்றும் உணராமல், ஒரே
மாதிரியான இரு மோசமான ஷாட்டுகளுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
யுவராஜை துவக்க ஆட்டக்காரர் ஆக்கியே தீருவேன் என்று அடம் பிடித்த கங்குலியின் அடாவடித்தனம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் சோப்ராவின் தன்னம்பிக்கை தரை மட்டமானது தான் மிச்சம்! ஆஸ்திரேலிய குதி-வேகக் (bouncy and fast!) களங்களிலேயே அருமையாக ஆடிய அவர், இப்போது பெங்களூரின் தட்டையான
களத்திலேயே சொதப்பினார்.
இதை விட அக்கிரமமான விஷயம் ஒன்று உண்டென்றால், அது, முதல் டெஸ்டில் 2-வது இன்னிங்க்ஸில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆடி ஆட்டத்தை எப்படியாவது 'டிரா' செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்தபோது, கங்குலி இல்லாத ரன்னுக்கு முட்டாள்தனமாக ஓடி, ரன்அவுட் ஆனது தான்! கங்குலியை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கி விட்டு, திராவிட்டை கேப்டன் ஆக்கினால் தான், நமக்கு விடிவு காலம் பிறக்கும் (சென்னை டெஸ்டில் இந்தியா வென்றாலும் கூட!).
அத்துடன் நில்லாமல், அணிக்கும் சற்று புது ரத்தம் பாய்ச்சுதல் நலம். அதற்கு, யுவராஜ், லஷ்மண், பார்த்திவ் படேல் போன்றோரை சிறிது காலம் அணியிலிருந்து விலக்கி வைக்கலாம். அவர்களுக்கு பதிலாக வரப்போகிறவர்கள் அவர்களை விட மோசமாக விளையாடுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே! அணிக்கு பலம் சேர்க்க மொஹமத் கெய்·வ், தினேஷ் கார்த்திக், ஹேமங்க் பதானி மற்றும் பல இளம் வீரர்கள் தயாராகவே உள்ளனர். நமது ஜாம்பவான் தெண்டுல்கரும் விரைவில் அணியில் சேர்ந்து விட்டால் நல்லது.
5 மறுமொழிகள்:
All your suggestions are very childish at best. Lets see one by one.
1. Ganguly should resign
He is the most successful captain in the history of Indian cricket. He seems to be a good leader. Who do you think should replace Ganguly. Dravid - too soft, SRT - tried before.
2. Yuvraj failed in Bangalore. Everyone batsman failed. Why singling out Yuvraj alone?
3. Ganguly is runing Chopra's good form - Go back and check the scorecard from the Oz series. Only thing he did was to protect our middle order from the new ball by staying in the crease. You might want to suggest to bring back a true opener like Ramesh.
4. Lakshman hasn't done anything since 281
Are you kidding? Go back and check his averages in Oz. He and Dravid sigle handedly won the match for us. He did descent againt Pak.
Dear Mr.Anonymous,
Your comments show a complete lack of cricket knowledge, at the best! Let us see one by one.
1. Let him be the most successful captain as statistics claim! He has done his part and on current form, he has no place in the test team, so let him GO! About Dravid, how do you say that he is SOFT without giving him an opportunity??? Getting wild, removing shirt and foul-mouthing others cannot be termed AGGRESSive!?!?!
2. Yuvaraj is singled out because he has been given enough opportunities and must be made to realize that he cannot take his place in the side for granted. No doubt, he is talented, but needs temperament in abundance!
3. Chopra was specifically asked by the team management to see OFF the new ball in the bouncy and pacy Australian tracks which he did with courage and conviction. That is why, our middle order (except Dravid and Sachin) was able ot play comfortably and score the runs, you are talking about!!! Fine, and why not Ramesh?
4. Yes. I accept that Lakshman did do something in Australia, but pl. go and check his string of low scores in the last 12 ODIs. He too needs a jolt to keep him awake and understand his responsibilities. "did DESCENT againt Pak" is simply not enough for his talent!?!?! I believe you meant "DECENTLY"?????????
EnRenRum Anbudan,
BALA
You are comparing someone's ODI stat with test match and decide to throw him out based on his ODI record. Laxman is not an ideal ODI player. I agree with you on that. But he has been our second best test player in the last few years. You want him to be dropped based on his ODI performance and yet you accuse me of lacking any cricket knowledge.
You wrote:
"Yuvaraj is singled out because he has been given enough opportunities and must be made to realize that he cannot take his place in the side for granted. No doubt, he is talented, but needs temperament in abundance"
Again you are confusing ODI with test matches. Yuvraj has played all of 5 test matches prior to Chennai test.
He scored a century in his third test against PAK in Lahore. What "enough opportunities" you are talking about?
Lets just agrre to disagree on the captaincy issue.
சரியான நேரத்தில் இந்த விவாதத்தை துவங்கியுள்ளீர்கள் பாலா. உங்கள் இருவரின் வாதங்களிலும் சில உண்மைகள் இருந்தாலும், மேலோங்கி நிற்பது இந்திய அணியின்மீதுள்ள ஆதங்கமே. கடந்த சில மாதங்களில் நம் அணியின் ஆட்டம் மிகவும் சுமாராக இருப்பது தெரிந்ததே. வெற்றி தோல்வியை மட்டுமே ஒரு அணியின் திறமையின் அளவுகோளாக கருதாமல்,ஒவ்வொரு ஆட்டத்ததிலும் நம் அணியின் ஆட்ட விதத்தை பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கையில், இந்த அணியிடம் பல குறைகள் இருப்பதை கண்கூடாக காணலாம். இதற்கு காரணம் நம் ஆட்டக்காரர்களின் திறமைக்குறைவல்ல...நம் ஆட்ட அணுகுமுறை (game plan) மற்றும் ஆட்டக்களத்தில் நம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிபடுத்துவதில் தான் (lack of application)என்பது என் கருத்து.
இப்பொழுது நடைபெறும் டெஸ்ட் ஆட்டங்களில், நம் ஆட்ட அணுகுமுறை மிகத்தவறாக உள்ளது.
1. தொடக்க ஆட்டக்காரர்கள்: சோப்ரா பெங்களூரில் சுமாராக ஆடியதால் அவரை நீக்குவதாக இருந்தால், யுவராஜ், லட்சுமண், இருவரையும் நீக்கியிருக்க வேண்டும். மேலும், டெஸ்ட் மேட்ச்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பது அவசியம். நியூ பாலின் shine'ஐ போக்குவது இவர்களின் தலையாய பணி. ஆஸ்திரேலிய டூரில் சோப்ரா இதை மிக உன்னதமாகச் செய்தார். ஆனால், அதை மட்டும்தான் அவரால் செய்ய முடியும் என்பது என் கருத்து. எனவே அவருக்கு பதில் ஒரு இயற்கையான தொடக்க ஆட்டக்காரரை கொண்டு வரவேண்டுமே தவிர, இயற்கையான தொடக்க ஆட்டக்காரர் அல்லாத யுவராஜ்'ஐ அல்ல. இது No.1 ஒரு கேலிகூத்தாக உள்ளது. சடகோபன் ரமேஷ் இன்னும் மிகச் சுமாராகத்தான் ஆடுகிறார். கவுதம் கம்பீர் என்பவர் தேவலை என்று சிலர் கூறுகிறார்கள்.
2. ஒரு நாள் போட்டிகளில் கேவலமாக ஆடிய லட்சுமண் இன்னும் மிக poor form'ல் இருகிறார். அவரை ஒரிரு ஆட்டங்களிலிருந்து விடுதலை தந்து domestic cricket ஆடி பழகியபின் வந்தால் போதும் என் கூற வேண்டும்.
3. முகமது கஃப் சென்னை ஆட்டத்தில் நன்றாக ஆடியுள்ளார். டிராவிட் இன்னும் சிரத்தையாக ஆடவேண்டும். கங்குலியின் form நன்றாக உள்ளது. ஆனால், ரன் எடுப்பது எப்படி என்று யாராவது அவருக்கு கற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்கும். (பீல்டிங் கன்சல்டன்ட் என்று ஒருவரை நியமிக்கலாம்!!)
4. அணியிலிருந்து தயக்கமில்லாமல் உடனே நீக்கப்பட வேண்டியவர் பார்திவ் படேல் தான். கடந்த ஓராண்டாக விக்கெட் கீப்பராக இல்லாமல் பந்து பொறுக்குபவராக மட்டுமே இருந்துவந்துள்ளார்.
5. பந்து வீச்சாளர்களை மாற்ற வேண்டிய அவசியம் தற்பொழுது இல்லை.(பெங்களூர், சென்னை இரண்டிலும் நன்றாகவே ஆடினார்கள்.)
6. தற்பொழுது கேப்டனை மாற்றுவது நம் அணிக்கு எந்த பயனையும் இப்பொழுது அளிக்காது. அணியின் ஆட்டக்காரர்கள் தங்கள் வேலையை சரியாகச் செய்தாலே கேப்டனின் வேலைச் சுமை குறைந்துவிடும்.
Let's see!
ரவி,
அருமையான analysis. கங்குலி, நல்ல form-இல் இருந்தாலும், இன்னும் ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு பயங்கரமாகத் தடுமாறத் தான் செய்கிறார். அதை சரி செய்தால் தான், அவர் டெஸ்ட் கிரிக்கெட் ஆட லாயக்கானவர் என்பது என் கருத்து. நீங்கள் கூறியது போல் ரன் ஓடி எடுப்பது எப்படி என்று யாராவது அவருக்கு கற்றுக் கொடுக்க வேண்டியதும் அவசியமாகிறது!
I also feel strongly that Dravid needs to be given a chance to skipper the test team, NOW. Let Ganguly continue to be the captain of the ODI team.
என்றென்றும் அன்புடன்,
பாலா
Post a Comment